உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் இன்று துவக்கம் சென்னை: இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில், 23வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்குகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா உட்பட 27 நாடுகளை சேர்ந்த 3,500 பேர் பங்கேற்கின்றனர். இதில், 88 வகையாக போட்டிகள் நடக்கின்றன. மாலையில் நடக்கும் துவக்கவிழாவில், துணை முதல்வர் உதயநிதி, நடிகர் ஆரியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். போட்டிகள் வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ளன. தேசிய யோகா போட்டி 270 பேர் பங்கேற்பு சென்னை: அச்சரப்பாக்கம், எஸ்.ஆர்.எம்., வேளாண்மை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், சென்னை ஈ.சி., யோகா ஸ்டூடியோஸ் சார்பில், தேசிய அளவிலான யோகா போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 270 பேர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தம் 13 வயது பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி