உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

அபார்ட்மென்டில் தீ விபத்து கேளம்பாக்கம்: கேளம்பாக்கத்தில் 14 மாடியில், 750 குடியிருப்பு அடங்கிய தனியார் குடியிருப்பு உள்ளது. நேற்று மதியம், இங்குள்ள ஏழாவது மாடியில், வாடகைக்கு வசிக்கும் நந்தகுமார் என்பவர் வீட்டில், தீப்பற்றி புகை வந்தது. குடியிருப்பு மக்கள் அலறியடித்து கீழே வந்தனர்; மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோவளம் மற்றும் சிறுசேரி தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த நில பத்திரங்கள், பணம் ஆகியவை எரிந்து சாம்பலாகி விட்டன. கண்ணகி கோவிலை சீரமைக்க ஆர்ப்பாட்டம் பாரிமுனை: தமிழக எல்லையில், தேனி மாவட்டம் கம்ப ம் அருகே உள்ள மங்களதேவி எனும் கண்ணகி கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து தரக்கோரி, நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 500க்கும் மேற்பட்டோர், கையில் சிலம்பு ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். பெண் பணியாளருக்கு உரிய நேரத்தில் உதவி வேளச்சேரி: வேளச்சேரி, ராஜலட்சுமிந கரில் நேற்று, துாய்மை பணியாளர் பவானி, 35, பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. அதே வழியாக ஓட்டுச்சாவடிகளில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு புறப்பட்ட செயற்பொறியாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். பவானி நலமாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை