உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வட சென்னை புது மின் நிலையம் 48 நாட்களுக்கு பின் உற்பத்தி

வட சென்னை புது மின் நிலையம் 48 நாட்களுக்கு பின் உற்பத்தி

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகா வாட் திறனில் வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது. அங்கு, கடந்த ஆண்டு மார்ச், 7ல் சோதனை ரீதியாக மின் உற்பத்தி துவங்கப்பட்டது. தினமும் சராசரியாக, 500 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. சோதனை பணிகளின் போது, தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதால், இந்தாண்டு ஜன., 31ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.தொழில்நுட்ப பிரச்னை சரிசெய்யப்பட்டதை அடுத்து, வட சென்னை - 3 மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி, நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கியுள்ளது.அங்கு, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, தொடர்ந்து மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.தற்போது, வட சென்னை - 3 மின் நிலையத்தில், 620 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மின் நிலையம், 72 மணி நேரம் முழு திறனில் உற்பத்தி செய்யப்பட்டதும், வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்படும்.ஆனால், வட சென்னை - 3 மின் நிலையத்தில், சோதனை மின் உற்பத்தி துவங்கி ஓராண்டான நிலையில், இன்னும் வணிக மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை