மேலும் செய்திகள்
மின்மாற்றியில் காப்பர் கம்பி திருட்டு
04-Nov-2026
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுாரில் வட மாநில தொழிலாளர் தங்கிய வீட்டை, தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சோழிங்கநல்லுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், வடமாநில தொழிலாளர்கள், தகர சீட்டு அமைத்து, வசித்து வருகின்றனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றனர். இன்று (நவ.,14) இந்த வீட்டை, மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. துரைப்பாக்கம், சிறுசேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த துணி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. செம்மஞ்சேரி போலீசார், தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
04-Nov-2026