உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மருத்துவமனையில் பணம் கேட்டால் புகாரளிக்க எண் அறிவிப்பு

 மருத்துவமனையில் பணம் கேட்டால் புகாரளிக்க எண் அறிவிப்பு

சென்னை: மருத்துவமனை ஊழியர்களுக்கு யாரும் பணம் தர வேண்டாம். அவ்வாறு கேட்பவர்கள் குறித்து, 93810 41296 என்ற மொபைல் போன் எண்ணில் தெரியப்படுத்த வேண்டும் என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு, 50, 100 ரூபாய் தருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இச்செயல் தவறு; இனி யாரும் செய்யக்கூாது. அரசு மருத்துவமனை என்பது, விலையில்லா மருத்துவ சேவை. மருத்துவ சேவையை பெறும்போது, யாராவது தங்களிடம் பணம் வாங்கினாலோ, அன்பளிப்பு கேட்டாலோ, அவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன்படி, திருவல்லிக்கேணி அரசு கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில், 50 விளம்பர பலகைகள் வைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறோம். இம்மருத்துவமனையில் யாராவது பணம் கேட்டால், 93810 41296 என்ற மொபைல் போன் எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ