மேலும் செய்திகள்
9 சட்ட மசோதாக்கள் : கவர்னர் ரவி ஒப்புதல்
31-Oct-2025
சேத்துப்பட்டு: எம்.சி.சி., பள்ளியில் நடந்த மாதிரி சட்டசபை கூட்டத்தொடரில், பதவி பிரமாணம் முதல் மசோதாக்கள் விவாதம், நிறைவேற்றுதல் உள்ளிட்டவை, மாணவர்களின் தத்ரூபமான விவாதத்தால் பரபரப்பாக நடந்தது. எம்.சி.சி., பள்ளியின், 190வது ஆண்டு விழாவையொட்டி நடந்த, மாணவர்களின் மாதிரி சட்டசபை கூட்டத்தில், 17 பள்ளி களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் 71 பேர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களாகவும், 54 பேர் எதிர்க்கட்சியினராகவும், 21 பேர் அமைச்சர்களாகவும் பங்கேற்றனர். அமைச்சர்கள் பதவியேற்பு விழா, அரசியல் விழாவை கண்முன் நிறுத்தியது. பெண் கவர்னர் முன்னிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பின், சட்டசபை வடிவில் அமைக்கப்பட்ட அரங்கில், கவர்னர் உரையுடன் கூட்டம் துவங்கியது. நன்றிவுரை, தீர்மானங்கள் எதிர்பார்ப்பை கூட்டியது முதல் நாளில், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, விலங்கு பாதுகாப்பு, துாய்மை தமிழகம், பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக்கு தடை உள்ளிட்ட ஐந்து மசோதாக்கள் தீவிர விவாதத்தின்பின் நிறைவேற்றப்பட்டன. நேற்று மேலும் ஐந்து மசோதாக்களுடன் கூட்டம் நிறைவடைந்தது. சட்டசபை கூட்டத்தொடருக்கு ஏற்ப மாதிரி சட்டசபையும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாது நடைபெற்றது.
31-Oct-2025