மேலும் செய்திகள்
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது
05-May-2025
அண்ணா நகர் :பெரம்பூர் வரும் ரயிலில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார், பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்ததில், ஐந்தரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரவி நாயர் பத்ரா, 25, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, 'டெலிவரி பாய்' போல, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்துள்ளார். ஒருமுறை கஞ்சா கடத்தி வந்து சேர்ப்பதற்கு 10,000 ரூபாய் விதம் 'கமிஷன்' வாங்கியதும் தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவருடன் தொடர்பில் உள்ள கஞ்சா வியாபாரிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
05-May-2025