உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு

நந்தனம் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு

சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, நந்தனம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 4.80 கோடி ரூபாயில், கலைஞர் கலையரங்கம் கட்டப்பட்டது. அதை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்து பேசியதாவது:வகுப்பறையை போன்று முக்கியமானது கலையரங்கம். ஏனெனில், படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறை சொந்தமானது.ஆனால், கலையரங்கம் முன்னால் மாணவர்களுக்கும் சொந்தம். இது, நீங்காத நினைவுகளை உள்ளடக்கியது.தமிழக அரசின் கலை கல்லுாரிகள் 171ல் இந்த கல்லுாரி, சென்னையின் அடையாளமாக திகழும் ஒன்று. இங்கு, முதன் முதலாக 1,000 பேர் அமரும், குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்வில், அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை