உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூண்டி, சோழவரம் ஏரிகளில் நீர் திறப்பு ஆவியாதலை குறைக்க நடவடிக்கை

பூண்டி, சோழவரம் ஏரிகளில் நீர் திறப்பு ஆவியாதலை குறைக்க நடவடிக்கை

சென்னை, ஆவியாதலை குறைக்க பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து, கால்வாய் வழியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி.,யில், தற்போது, 8.76 டி.எம்.சி., நீர் உள்ளது. பூண்டி ஏரியில் 2.30 டி.எம்.சி.,யும், சோழவரம் ஏரியில் 0.67 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது. இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால், கால்வாய்கள் வாயிலாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் திறக்கப்படுகிறது.கோடை வெயில் தாக்கம் அதிகரித்தால், நீர் ஆவியாதல் அளவு அதிகரிக்கும். மேலும், நீர் எடுத்துச் செல்லும் கால்வாய்களில், புனரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.இதனால், பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு, 303 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 416 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது.சோழவரம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரால், புழலுக்கு வினாடிக்கு 380 கன அடியும், பூண்டியில் இருந்து திறக்கப்படும் நீரால், செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு 220 கன அடி நீர்வரத்தும், நேற்று கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ