உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

திருமங்கலம், மாடியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர், சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்கு அண்ணா நகர், திருமங்கலம் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 46; பெயின்டர். திருமணமாகாத இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தோர், இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவர், ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், இவர் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பது தெரியவந்தது. மீண்டும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது துாக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை