உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது அருந்தியபோது தகராறு பெயின்டர் வெட்டி கொலை

மது அருந்தியபோது தகராறு பெயின்டர் வெட்டி கொலை

மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், எல்.எஸ்.பி., தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 32; பெயின்டர். நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆனந்தராஜ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அருகில் வசிக்கும் உறவினர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, தலை, காது, கைகளில் பலத்த வெட்டு காயங்களுடன் ஆனந்தராஜ் ரத்தவெள்ளத்தில் இருப்பதை கண்டனர்.அவருக்கு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே ஆனந்தராஜ் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாவது:நேற்று முன்தினம், ஆனந்தராஜின் தாய் சாரதா, புதுவாயல் கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கும், தம்பி செந்தில்குமார் வேலைக்கும் சென்றிருந்தனர்.ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்தார். இரவு, நண்பர்களுடன் சேர்ந்து, மது அருந்தி உள்ளார். நள்ளிரவு 11:00 மணிக்கு மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆனந்தராஜை, நண்பர்கள் இருவர் சேர்ந்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளனர்.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில், மீஞ்சூர் போலீசார் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ