உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருப்பாச்சிமேட்டில் பழனி முருகன் அன்னதான குடில்

விருப்பாச்சிமேட்டில் பழனி முருகன் அன்னதான குடில்

சென்னை,திண்டுக்கல் மாவட்டம், விருப்பாச்சிமேட்டில் அன்னதான குடில் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக, பழனி முருகன் அன்னதான குடில் நிர்வாகம் வெளியிட்ட வேண்டுகோள்:ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று விரதம் இருந்து, பழனிக்கு பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். அவர்களுக்கு ஜனவரி 21ல் திண்டுக்கல்; 22, 23ல் விருப்பாச்சிமேடு ஆகிய இடங்களில், காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்க, பழனி முருகன் அன்னதான குடில் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். அன்னதானத்துடன் மருத்துவ முகாமும் நடக்க உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, 14வது ஆண்டாக நடக்கும் அன்னதானத்திற்கு, பொதுமக்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம். உதவி செய்ய விரும்புவோர், 99443 09719, 98421 98889 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி