உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தி.மு.க., ஆட்சியில் சென்னை ரவுடிகளின் ராஜ்யமாகிவிட்டது பழனிசாமி குற்றச்சாட்டு

 தி.மு.க., ஆட்சியில் சென்னை ரவுடிகளின் ராஜ்யமாகிவிட்டது பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறி விட்டது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் மோதிக் கொண்டதால், பொது மக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில், இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், கும்பகர்ண துாக்கத்தில் இருக்கும்போது, மக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள்? சென்னையின் பிரதான சாலைகளில், ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது எப்போதும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. ரவுடியிசத்தை கண்டு மக்கள் அலறி ஓடியதை, தமிழகத்தில் இதுவரை நடந்திடாத தி.மு.க., அரசின் சாதனை என்று, ஸ்டாலின் விளம்பரம் செய்து கொள்ளலாம். சென்னையில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, தி.மு.க., அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ