கணைய நோய் ஆலோசனை உதவி மையம்
சென்னை, கணைய நோய் குறித்த ஆலோசனைக்காக, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை, 'ஜெம்' மருத்துவமனை துவங்கி உள்ளது. மேலும், 70920 51931 என்ற உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல், வரும் 31ம் தேதி வரை, கணைய நோய்களுக்கான இலவச விழிப்புணர்வு முகாமையும் நடத்துகிறது. இந்த முகாம் வாயிலாக, ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவும். முன்கூட்டியே முன்பதிவும் செய்யலாம்.ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், ''எங்கள் மருத்துவ குழு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணைய புற்றுநோய்களுக்கு ஆறு வெவ்வேறு லேபராஸ்கோபிக், ரோபோடிக் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். அறிகுறிகளை புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் பரிசோதித்துக் கொள்வது அவசியம்,'' என்றார்.