உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முடங்கிய உரம் தயாரிப்பு மையங்கள்... ரிப்பேர்! கொட்ட இடமில்லாமல் குவியும் குப்பை

முடங்கிய உரம் தயாரிப்பு மையங்கள்... ரிப்பேர்! கொட்ட இடமில்லாமல் குவியும் குப்பை

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி, 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்திடம், 2023, மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 26 உரம் தயாரிப்பு மையங்களில் கொட்டப்படுகின்றன.இந்த குப்பை கழிவுகள், முறையாக கையாளப்படாததால், குப்பை மலையாக உருவெடுத்து வருகின்றன. இதனால், மேற்கு தாம்பரம் அடுத்த கன்னடப்பாளையம், பம்மல் விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், எப்போதும் இல்லாத அளவிற்கு டன் கணக்கில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.'தாம்பரம் மாநகராட்சியில், உரம் தயாரிக்கும் மையங்கள், மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்கள் தேக்கி வைப்பதாலே, குப்பை பிரச்னையை தீர்க்க முடியாததாக நீடிக்கிறது' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குப்பை பிரச்னையை தீர்க்க, 35 உரம் தயாரிக்கும் மையங்கள், 51 சிறிய உரம் தயாரிக்கும் குடில்கள் அமைக்கப்பட்டு, 2023 ஏப்ரலில் செயல்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதுவரை, 20 உரம் தயாரிக்கும் மையங்கள், பொருட்களை தேங்கி வைக்கும் ஒரு மையம் ஆகியவை மட்டுமே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவையும், முறையாக செயல்படாமல் உள்ளன.இங்குள்ள இயந்திரங்கள், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை பழுதாகி உள்ளன. இயந்திர பாகங்கள் கிடைப்பதல் சிக்கல் நிலவுவதால், பழுதை சீரமைக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.கன்னடபாளையம், விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 'மிக்ஜாம்' புயலின் போது சேகரிக்கப்பட்ட குப்பையை கொட்டியதால், அங்கு குப்பை தேங்கி உள்ளது. 40 நாட்களில் குப்பை அகற்றப்படும். உரம் தயாரிக்கும் மையங்களில் இயந்திரங்கள், கன்வேயர் பழுதாகி உள்ளன. 30 மையங்களிலும் புதிய இயந்திரங்கள் பொருத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பணிகள் துவங்கப்படும்.அருளானந்தம்நகர் நல அலுவலர், தாம்பரம் மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி