உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கனரக வாகனங்களை நிறுத்துவதால் ஆற்காடு சாலையில் தினமும் அவதி

 கனரக வாகனங்களை நிறுத்துவதால் ஆற்காடு சாலையில் தினமும் அவதி

வளசரவாக்கம்: மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக எடுத்து வரப்பட்ட கனரக வாகனங்கள், வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். வளசரவாக்கம் - போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியால் சாலை முழுதும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. 'டிட்வா' புயல் மழையால் வெள்ளம் தேங்கி, சாலை மேலும் மோசமாகி உள்ளது. இந்நிலையில், மெட்ரோ பணிக்காக எடுத்து வரப்பட்டுள்ள ராட்சத கனரக வாகனங்கள், பணியிடத்தில் துாண்களை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன. இவை, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதோடு, விபத்து ஏற்படுத்தும் நிலையிலும் உள்ளன. எனவே, வாகன போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் ராட்சத கனரக வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். தவிர, அவ்வப்போது சாலையோரம் நிறுத்தப்படும் ஆக்கிரமிப்பு வாகனங்களையும் அகற்ற வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால், வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ