வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாட்டை காக்க.... தமிழ் நாட்டை காக்க.... திமுக.... கான் கிராஸ் தவிர்த்து அதனை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..... யார் திரும்ப ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் முக்கியம்.
சென்னை, ''தி.மு.க.,வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், 123 பிறந்தநாள் முன்னிட்டு, த.மா.கா., சார்பில், புரசைவாக்கத்தில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:வரும் 2026 சட்டசபை தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கான தேர்தல். அத்தகைய சீரான நிலைப்பாட்டில், த.மா.கா., செயல்பட்டு வருகிறது.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெற்றி பயணமாக தொடங்கி இருக்கிறது. தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, போதை, பாலியல், குற்றங்கள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வெளியில் இருந்து தி.மு.க.,வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும், ஆட்சி மாற்றம் என்ற ஒற்றைக் கருத்தோடு ஒன்று சேர வேண்டும்.ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக, ஒற்றைக் கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர்க்கும் செயலில் த.மா.கா., ஈடுபடும்.மத்திய அரசை கண்மூடித்தனமாக தி.மு.க., எதிர்ப்பதால், பல திட்டங்கள் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. தமிழகம், 100 சதவீத வளர்ச்சியடைய, மத்திய அரசுடன் இணக்கம் தேவை. தமிழகத்துக்கு ஒரு விடிவு காலம் தேவை; ஆட்சி மாற்றம் தேவை. எனவே எல்லோரும் இணைந்து, தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஒன்றுபடுவோம்; வெற்றி பெறுவோம்.இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
நாட்டை காக்க.... தமிழ் நாட்டை காக்க.... திமுக.... கான் கிராஸ் தவிர்த்து அதனை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..... யார் திரும்ப ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் முக்கியம்.