சென்னை: மின்சார ரயில் சீசன் டிக்கெட்டில் உள்ள எழுத்துகள், அடுத்த 15 நாட்களிலேயே அழிந்து விடுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, சென்ட்ரல் -- திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் தினமும், 550 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில், 160 கி.மீ., வரை சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. புறநகர் மின்சார ரயில்களில், தினமும் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். பயணியர் வசதிக்காக, ஒரு மாத ம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு ஆண்டு என, நான்கு வகையான சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்த ரயில் பயணியரில், 40 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பாஸ் வாங்கிய இரண்டு வாரங்களிலேயே, அதில் இருக்கும் எழுத்துகள் அழிந்து விடுகின்றன. டிக்கெட் பரிசோதர்கள் சோதனை நடத்தும்போது, இந்த டிக்கெட் இந்த மாதத்துக்கு உரியது தா னா என, சந்தேகத்துடன் கேட்கின்றனர். இதனால், சில இடங்களில், பயணியருக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் வாக்குவாதமும் நடக்கிறது. இதுகுறித்து, பயணியர் சிலர் கூறுகையில், 'ரயில்வே சீசன் டிக்கெட்டில் உள்ள தகவல்கள் எளிதில் அழிந்துவிடுவதால், டிக்கெட் பரிசோதகர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தரமான அட்டையில், எளிதில் அளியாத பிரிண்டுகளில் சீசன் டிக்கெட் வழங்க வேண்டும்' என்றனர். சென்னை - ஷாலிமர் சிறப்பு ரயில்கள் ஜனவரி வரை நீட்டிப்பு பயணியர் தே வை கருதி, சென்னை - மேற்க வங்க மாநிலம், ஷாலிமருக் கு இயக்கப்படும் வாரந்திர ரயில் சேவை ஜ னவரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ஷாலிமர் - சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 5, 12, 19, 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - ஷாலிமருக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 7, 14, 21, 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.