உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வூதியர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று வேளச்சேரி மற்றும் கிண்டி தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 10 சதவீதம் அதிக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை