உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வீஸ் சாலை சீரமைப்பில் அரைகுறை பணி மீண்டும் ரயில்வேயிடம் போராடும் மக்கள்

சர்வீஸ் சாலை சீரமைப்பில் அரைகுறை பணி மீண்டும் ரயில்வேயிடம் போராடும் மக்கள்

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சர்வீஸ் சாலை உள்ளது. மத்திய அரசின் ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், சந்தைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த சாலையில், குறைந்தபட்ச பராமரிப்பு பணி கூட செய்யாமல், ரயில்வே அலட்சியமாக இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக குண்டும், குழியுமான இச்சாலையில் ஆக்கிரமிப்புகள் பெருகின. அதையே காரணம் காட்டி, புதிய சாலை அமைக்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வந்தது.இச்சாலையின் நிலை குறித்து, நம் நாளிதழில் பல முறை சுட்டிக் காட்டிய பின், கடந்த 2022 ஆக., 5ம் தேதி, ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.அதன் பின், புதிய சாலை அமைக்கு பணிகளை, ரயில்வே நிர்வாகம் துவங்கியது. அங்கு, ஒரு பகுதியில் மட்டும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அரைகுறையாக உள்ளது. இதனால், சாலையில் சிமென்ட் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடந்ததால், மக்கள் தடுமாறி கீழே விழுந்தனர். மழைக்காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து வெளியான செய்தியை அடுத்து, கடந்த செப்., மாதம் ரயில்வே துறை திட்ட அறிக்கை தயார் செய்து, புதிய சாலை அமைக்கும் பணியை துவங்கியது. முதல் கட்டமாக, கடந்த டிச., மாதம் ரயில் நிலையத்தில் இருந்து, சுரங்கப்பாலம் வரை புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.தொடர்ந்து, மற்றொரு பகுதியான ஐ.சி.எப்., மேம்பாலம் வரை, புதிய சாலை அமைக்கும் பணி, கடந்த ஜனவரியில் துவங்கியது. அதன் பின், அப்பணியும் 100 மீ.,க்கு மேல் அரைகுறையாக நிற்கிறது.இதனால், அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால், சந்தை வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். ரயில்வே அதிகாரிகள் இதை கண்காணித்து, அரைகுறையாக நிற்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ