மேலும் செய்திகள்
30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதி
09-Sep-2025
ஆவடி, கோபாலபுரத்தில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பகுதி மக்கள் சேற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் 20வது வார்டு, கோபாலபுரத்தில் கிழக்கு, மேற்கு பகுதியில், 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்காக 15க்கும் மேற்பட்ட தெருக்கள் தோண்டப்பட்டுள்ளன. பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில், சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, கோபாலபுரம், 6, 7 பிரதான சாலை, அப்துல் கலாம் சாலை, தென்றல் நகர் 5வது சாலை குண்டும் குழியாகவும், சேறும் சகதியாகவும் மாறி படுமோசமாக உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கோபாலபுரம் பகுதிமக்கள் 50க்கும் மேற்பட்டோர், ஆவடி மாநகராட்சியை கண்டித்து, சேற்றில் இறங்கி, நேற்று போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
09-Sep-2025