உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி

 செல்லபிராணிகள் பதிவு: வரும் 14ம் தேதி கடைசி

சென்னை: சென்னையில் செல்ல பிராணிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 14ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செல்ல பிராணிகள் வளர்ப்போர், மாநகராட்சியில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, மாநகராட்சி இணையதளம் மூலம் உரிமம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஏழு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில், உரிமம், தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்தப்படுகிறது. வேலைக்கு செல்வோர் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நேற்று, 956 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, 'மைக்கோ சிப்' பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: செல்ல பிராணிகள் குறித்து பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, 96,056 செல்ல பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 49,347 பிராணிகளுக்கு உரிமம் வழங்கி, தடுப்பூசி போட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. ஏழு மையங்களும், அனைத்து நாட்களும் செயல்படும். வரும் 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கடைசி சிறப்பு முகாம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி