உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போன் திருடர்கள் சிக்கினர்

 போன் திருடர்கள் சிக்கினர்

சேலையூர்: தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தில், நேற்று முன்தினம், சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை, ரோந்து பணியில் இருந்த சிட்லப்பாக்கம் போலீசார் மடக்கி விசாரித்தனர். போலீசாரை கண்டதும், இருவரும் கையில் வைத்திருந்த சிறிய கத்தியை கீழே போட்டனர். அவ்வழியாக சென்ற சேலையூர் போலீசார், இதை பார்த்து வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, இருவரும் சேலையூர் காவல் நிலைய பகுதியில் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட, ரஜினி, 18, நகுலன், 18, என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி