மேலும் செய்திகள்
சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு
30-Oct-2024
பள்ளிக்கரணை:பல்வேறு நலச் சங்கத்தினர் சார்பில், பள்ளிக்கரணை அணை ஏரியைச் சுற்றிலும், 500 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டன. நீர் பிடிப்பு பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும், பனை மரங்கள் அளப்பரிய பங்களிப்பு செய்கின்றன. எனவே, பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, தமிழகம் முழுக்க தன்னார்வலர்கள் பனை மர விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு நலச் சங்கங்களை சேர்ந்தோர், அப்பகுதியில் உள்ள அணை ஏரியில், 500 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.குடியிருப்போர் சங்க நிர்வாகி முருகன் கூறியதாவது:'அணை ஏரி கரையோரம் பனை விதைகளை நடவு செய்யுங்கள்' என, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 500 பனை விதைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, இப் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நேற்று காலை முதல் மாலை வரை, 500 விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். தவிர, பள்ளம் தோண்டும் பணிக்காக, ஐந்து ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
30-Oct-2024