உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மோசடி தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மோசடி தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்

சென்னை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக, 1.60 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டதாக, தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:உயர் ரத்த அழுத்தம் காரணமாக, 27 வயதான என் மகன் கவுதமனுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தனர். இது பற்றி எனக்கு தெரிந்த சேகர் என்பவரிடம் தெரிவித்தேன்.இவர், வியாசர்பாடியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஆரிய சங்கர் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இவர், என் மகனுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக, 1.60 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார். பணம் கொடுத்தது பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகிகளிடம் கூறினேன். நாங்கள் அப்படி யாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிப்பது இல்லை என, என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். என்னிடம் பண மோசடி செய்த தி.மு.க., நிர்வாகி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இப்புகார், சம்பந்தப்பட்டகொடுங்கையூர் காவல் நிலைய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை