உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னல்களை இயக்காததற்கு போலீசார் நொண்டி காரணம்

சிக்னல்களை இயக்காததற்கு போலீசார் நொண்டி காரணம்

சென்னைசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் விதமாக, 350 சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டும், அவற்றை ஏனோ போக்குவரத்து போலீசார் இயக்க நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலை, போலீசார் இயக்குவதே இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுத்து விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, போலீசாரை அங்கே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சிக்னல் இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இல்லையேல், அவரவர் வாகனங்கள் வருகிறதா என்பதை பார்த்து கடந்து சென்றுவிடுவர். இதன் காரணமாகவே சிக்னல்களை இயக்கவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
டிச 17, 2024 15:52

பிறகு வெட்டியாக இவர்களுக்கு எதற்கு சம்பளம்? வீட்டிற்கு அனுப்பினால் அரசிற்குப் பணம் மிச்சம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை