மேலும் செய்திகள்
டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
04-Jan-2025
மணலி, திருவொற்றியூர், சக்தி கணபதி நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 44. இவர், மணலி போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றினார்.நேற்று மதியம் மணலி சந்தை சந்திப்பில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் இருந்த அவருக்கு, மாலை 5:50 மணிக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின், மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஜெயகிருஷ்ணன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த மணலி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
04-Jan-2025