உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் கால்வாய் பணி போலீசார் தடுத்து நிறுத்தம்

கழிவுநீர் கால்வாய் பணி போலீசார் தடுத்து நிறுத்தம்

பண்ணுார்:பண்ணுாரில் அனுமதியின்றி தனிநபர் ஒருவர் கால்வாய் தோண்டும் பணி மேற்கொண்டார். மப்பேடு போலீசார் பணிகளை நிறுத்தினர். திருப்பந்தியூர் ஊராட்சி பண்ணுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின், 50. இவர் நேற்று தனது வீட்டிலிருந்து கழிவுநீர் செல்லும் வகையில் குடியிருப்பு பகுதியில் சாலையில் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி மேற்கொண்டார். இதில் அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இரு குடிநீர் குழாய்கள் சேதடைந்தது. இதையடுத்து அப்பகுதிவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த மப்பேடு காவல் சப் - இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து பணி மேற்கொண்டவரிடம் அனுமதி குறித்து கேட்டனர். வி.ஏ.,ஓ., ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது எவ்வித தகவலும் வாங்க வில்லை என, போலீ சாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மப்பேடு போலீசார் அவரை எச்சரித்து பணியை நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை