உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சல் ஊழியர்கள் கூட்டு குழுவினர் தர்ணா

அஞ்சல் ஊழியர்கள் கூட்டு குழுவினர் தர்ணா

சென்னை: ஊழியர்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில், அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன், நேற்று தர்ணா நடந்தது. இதில், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க பொதுச்செயலர் மகாதேவய்யாவின் மீது உள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய வேண்டும். கணக்கு பிடித்துக் கொடுத்தால் தான் விடுப்பு என்பதை கைவிட வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலர் - பொறுப்பு, சுப்பிரமணி, மாநில தலைவர் ராமசாமி உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ