உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேலையூரில் நள்ளிரவில் மின்தடை

சேலையூரில் நள்ளிரவில் மின்தடை

சேலையூர்,தாம்பரம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சேலையூர் பகுதியில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு, 1 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால், முதியோர், குழந்தைகள், துாக்கமின்றி அவதிப்பட்டனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்று அறிவிக்கப்படாத மின்தடையால், பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்தடை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடை ஏற்படுவது இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி