உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறநகரில் தொடருது மின்வெட்டு இரவில் துாக்கமின்றி பரிதவிப்பு

புறநகரில் தொடருது மின்வெட்டு இரவில் துாக்கமின்றி பரிதவிப்பு

தாம்பரம்,சென்னை புறநகர், சேலையூர் அடுத்த சந்தோஷபுரம், விசாலாட்சி நகர் 2வது தெருவில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, மின்வெட்டு ஏற்பட்டது.இப்பகுதிக்கு மாடம்பாக்கம், செம்பாக்கம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பகுதிக்கான மின் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டோர், அப்பகுதியில் உள்ள மின் அலுவலகத்திற்கு புகார் அளிக்க நேராக சென்றுள்ளனர். அலுவலகத்தில் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். புகார் எண்ணை தொடர்பு கொண்டபோதும் உரிய நடவடிக்கை இல்லை.நேற்று காலை, 7:30 மணிக்கு பழுது சரிசெய்யப்பட்ட பின்னரே, அந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், இரவில் துாக்கமின்றி பொதுமக்கள் பரிதவித்தனர்.புறநகர் பகுதிகளில் இதுபோல் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இரவில் பழுது ஏற்பட்டால், உடனுக்குடன் சரிசெய்து மின் வினியோகத்தை சீராக வழங்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி