மேலும் செய்திகள்
சேலம் மாநகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு
11-Mar-2025
திருவொற்றியூர்,திருவொற்றியூர், பத்மநாபா காலனியைச் சேர்ந்தவர்கள் சுடலை முருகன் - சொர்ணலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூத்த மகளான, 10 வயது சிறுமி, திடீரென மாயமானார். திருவொற்றியூர் காவல் நிலையத்தில், பெற்றோர் வாய்மொழி புகார் அளித்தனர்.தகவலறிந்த திருவொற்றியூர் உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையிலான போலீசார், சிறுமியின் வீட்டருகே முகாமிட்டு, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். சுற்றுவட்டார வீடுகள் உட்பட பல இடங்களில், நான்கு மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு 11:30 மணியளவில், மாயமான சிறுமியை, இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் அழைத்து வந்துள்ளார். சிறுமியை மீட்ட போலீசார், வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், சிறுமியை அழைத்து வந்த வாலிபர், திருவொற்றியூர், தேரடியைச் சேர்ந்த ஞானபிரகாஷ், 35, என்பதும், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றபோது, தேரடி - சன்னதி தெருவில், சாலையோரம் சிறுமி தனியாக அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார்.பின், வீடு திரும்பும்போதும் சிறுமி அதே இடத்தில், கவலையுடன் அமர்ந்திருந்தாள். சந்தேகமடைந்த ஞானபிரகாஷ், அவரிடம் சென்று விசாரித்துள்ளார்.அப்போது, தந்தை வீட்டிற்கு வாங்கி வைத்திருந்த சிக்கன் பகோடாவை, தவறுதலாக குப்பையுடன் சேர்த்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாகவும், தாய் கண்டித்த நிலையில், உறங்கிக் கொண்டிருந்த தந்தை எழுந்தால் அடிப்பார் என பயந்து போன சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி, தேரடி - சன்னதி தெருவில் சாலையோரம் அமர்ந்திருந்தது தெரியவந்தது.சிறுமியை, சமாதானம் செய்த வாலிபர், அவரை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்தார். அங்கு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் இளங்கோவனிடம் ஒப்படைத்தார்.வாலிபரின் செயலை வெகுவாக பாராட்டிய உதவி கமிஷனர், தெருவில் கூடியிருந்த பொதுமக்களையும் கைதட்டி உற்சாகப்படுத்த கோர, பகுதிவாசிகளின் ஒட்டுமொத்தமாக கரகோஷம் எழும்பி ஞானபிரகாைஷ பாராட்டினர்.
11-Mar-2025