உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை தியேட்டர்களில் பிரதமர் மோடி திரைப்படம்

சென்னை தியேட்டர்களில் பிரதமர் மோடி திரைப்படம்

சென்னை;'செப்., 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்து, சிறப்பு திரைப்படம் திரையிடப்படும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: வரும், 17ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி, காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் விழாக்களுடன், மக்கள் நல சேவை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட உள்ளது. செப்., 18 முதல், 24ம் தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்து, ஒரு மணி நேரம் சிறப்பு திரைப்படம் திரையிடப்படும். பா.ஜ., மாவட்ட தலைவர்கள், தங்கள் மாவட்டங்களில் ஒரு தியேட்டருக்கு, மூவர் அடங்கிய குழுவை நியமித்து, முன்கூட்டியே டிக்கெட் பெற்று, மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் என, அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்கள் குடும்பத்துடன் பார்க்கும் சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை