உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்

 லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி லாக்கரில் இருந்த 29.75 சவரன் நகை திருட்டு போன வழக்கில், வங்கி ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சுரூபா ராணி சிவகுமார் என்பவர், வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் லாக்கர் வைத்திருந்தார். அடிக்கடி லாக்கரை பயன்படுத்துவதால், லாக்கரை அணுகும் உரிமையைச் சென்னையில் வசிக்கும் அவரது தாயிடம் ஒப்படைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் லாக்கரில் உள்ள நகையை சரிபார்த்தபோது, 29.75 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், லாக்கர் பாதுகாப்புப் பிரிவின் வங்கி ஊழியர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், திருடிய நகையை வேளச்சேரியில் உள்ள தனியார் அடகு கடையில், 21 லட்சம் ரூபாய்க்கு விற்று, பணத்தை பணிபுரியும் வங்கியிலேயே மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. வங்கி ஊழியரை கைது செய்த போலீசார், 20.60 லட்சம் ரூபாய் மற்றும் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் அடகு கடையில் இருந்து, 188 கிராம் உருக்கிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை