உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவன மேலாளர் கழிப்பறையில் மர்ம மரணம்

தனியார் நிறுவன மேலாளர் கழிப்பறையில் மர்ம மரணம்

சென்னை;தனியார் நிறுவன மேலாளர், கழிப்பறையில் மரணமடைந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 58; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி மற்றும் மகள், கோயம்புத்துாரில் வழக்கறிஞராக பணிபுரிகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பாபுவை, மனைவி தொடர்பு கொண்ட போது, அவர் மொபைல் போன் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து, அருகிலுள்ள உறவினரிடம் கூறி, அங்கு சென்று பார்க்கும்படி கூறினார். இவரது உறவினர் அங்கு சென்று பார்த்த போது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, பாபு கழிப்பறையில் இறந்து கிடந்தார். உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், மர்ம மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை