உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவன தரவுகள் திருடி விற்றவர் சிக்கினார்

தனியார் நிறுவன தரவுகள் திருடி விற்றவர் சிக்கினார்

ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஜெய்பாலாஜி, 45, என்பவர், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.அதில், நான், 'மெட் ப்ரோ பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த உமர், 35, சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கார்த்திக், 37, அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37, ஆகியோர் பணிபுரிந்தனர். இதில் கார்த்திக், என் நிறுவனத்தின் தரவுகளை திருடி, மின்னஞ்சல் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக, அயப்பாக்கத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரின், 'எம்.கேர் ப்ரோ பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இது குறித்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார், கார்த்திக்கை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள உமர் மற்றும் செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ