மேலும் செய்திகள்
கழிப்பறையில் பேராசிரியர் மர்ம சாவு
24-Dec-2024
மதுரவாயல்வளசரவாக்கம் மண்டலம், கடந்த 2011ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.இதில், மதுரவாயல் 146, 147 ஆகிய வார்டுகளில், 2012 -- 2016ல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்ட பின், கடந்த 2018ம் ஆண்டு முதல், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.மதுரவாயல் 146, 147 ஆகிய வார்டுகளில், 2011ம் ஆண்டு, 50 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.பாதாள சாக்கடை திட்ட பணிகளின் போதும், பிற சேவை துறைகள் மேற்கொண்ட பணிகளாலும், இரு வார்டுகளிலும், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.அதனால், குறிப்பிட்ட இரு வார்டுகளில், குடிநீரில் கழிவு நீர் கலந்தது. இதனால், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர்.குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்கவும், முழுமையாக தடுக்கவும் முடியாமல் குடிநீர் வாரியம் திணறியது.இதையடுத்து, தெருக்களில் குடிநீர் தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2023ல், குடிநீர் குழாயில் ரோபோட் கேமரா செலுத்தி, எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என கண்டுபிடிக்கும் பணி, ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின் அறிக்கையின்படி, முதற்கட்டமாக, மதுரவாயல் 146 மற்றும் 147வது வார்டுகளில், தலா 3.75 கி.மீ., துாரத்திற்கு, 9 கோடி ரூபாய் செலவில், டி.ஐ., குழாய் எனப்படும் இரும்பு குழாய் அமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்தது.தற்போது, மதுரவாயல் 147வது வார்டு, ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 3.5 கி.மீ., துாரத்திற்கு, 2.4 கோடி ரூபாய் மதிப்பில், இரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அதேபோல், மதுரவாயல் பாரதிதாசன் நகரில் உள்ள இரண்டு தெருக்களில் வசிக்கும், 300க்கும் மேற்பட்ட வீடுகள், பல ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.இதனால், ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். ஆனால், குடிநீர் வரியை மட்டும் தவறாமல் கட்டி வருகிறோம் என, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மதுரவாயல் பகுதியில் உள்ள பழைய குடிநீர் குழாய் மாற்றி, இரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதில், 146வது வார்டில், 4 கி.மீ., துாரத்திற்கு, 4 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.பாரதிதாசன் நகரில், சில நாட்களில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.இப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
24-Dec-2024