உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூவருக்கு கத்திக்குத்து வாலிபருக்கு காப்பு

மூவருக்கு கத்திக்குத்து வாலிபருக்கு காப்பு

வடக்கு கடற்கரை: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா, 24.இவர், தன் சகோதரர் சரண், நண்பர் சரத் ஆகியோருடன், நேற்று முன்தினம் அதிகாலை, பாரிமுனை, பீச் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், சூர்யாவிடம் வீண் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சூர்யாவை தாக்கியுள்ளார்.தடுக்க வந்த சரண் மற்றும் சரத் ஆகியோரையும் கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடினார். இது குறித்து, வடக்கு கடற்கரை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.அதன்படி, தாக்குதலில் தொடர்புடைய, பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலையைச் சேர்ந்த விக்னேஷ், 21, என்பவரை, நேற்று கைது செய்தனர்.அவரிடமிருந்து, ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது, ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை