உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விம்கோ நகர் சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

 விம்கோ நகர் சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

எண்ணுார்: விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எர்ணாவூர் - பாரத் நகர் சந்திப்பில், மா.கம்யூ., கட்சி - திருவொற்றியூர் வடக்கு பகுதி சார்பில், நத்தம் புறம்போக்கு, குடிசை மாற்று வாரியம், கோவில் நிலம், ரயில்வே நிலம் மற்றும் நீர்நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு நிலவகையை மாற்றி, பட்டா வழங்க வேண்டும். மணலி விரைவு சாலையில், அணுகு சாலை இல்லாததால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மெட்ரோ ரயில் சேவையை, விம்கோவில் இருந்து மாதவரம் வரை நீட்டிக்க வேண்டும். விம்கோ நகர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, தர்ணா போராட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்தரராசன், நான்காவது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி