உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது முன்விரோதம்: வீடு புகுந்து வெட்டியவருக்கு காப்பு

பொது முன்விரோதம்: வீடு புகுந்து வெட்டியவருக்கு காப்பு

கோடம்பாக்கம், முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில், வீடு புகுந்து வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார், 42. கடந்த 27ம் தேதி, அசோக் நகரைச் சேர்ந்த லோகேஷ்குமார், 33, என்பவர், சரவணகுமாரின் வீட்டில் புகுந்து தகராறு செய்து சரவணனை வெட்டி உள்ளார். தடுக்க வந்த சரவணனின் மனைவியை தகாக வார்த்தையால் பேசி, தாக்கி தப்பினார். சரவணகுமாரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கோடம்பாக்கம் போலீசார் லோகேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த மே மாதம் சரவணகுமாரின் உறவினரின் மகளை, காதலிப்பதாக கூறி லோகேஷ்குமார் தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சரவணகுமார் கத்தியால் லோகேஷ்குமாரை தாக்கியுள்ளார். இந்த வழக்கில், அசோக் நகர் போலீசாரால் சரவணகுமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமினில் வந்ததை அறிந்த லோகேஷ்குமார், வீடு புகுந்து கத்தியால் வெட்டியது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை