உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

மாதவரம்,:மாதவரம் பால்பண்ணை, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43; வெல்டர். இவரது மனைவி உமா.இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மது அருந்திவிட்டு, அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் அருகே சென்றதும், அங்கு மறைந்திருந்த மூவர் சுற்றி வளைத்து, கத்தியால் மணிகண்டனை சரமாரியாக வெட்டினர்.முகம், கழுத்து, கை மற்றும் கால் என பல இடங்களில் வெட்டு காயங்களுடன் சாலையில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நள்ளிரவு 12:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதில், மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்ததாகவும், ஜெயபிரகாஷ் எச்சரித்தும், மணிகண்டன் அதை பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார், ஜெயபிரகாஷ் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி