மேலும் செய்திகள்
புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே அடி, தடி
24-Aug-2025
புழல், புழல் சிறையில், தலையை சுவரில் மோதியும், டியூப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தியும் தற்கொலைக்கு முயற்சித்த கைதியால், சலசலப்பு ஏற்பட்டது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் 'ரேஸர்' கணேஷ், 32. கடந்த 10ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் டி.பி.சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டது முதல் கணேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சிறை அறையில் இருந்த கணேஷ், சுவரில் தன் தலையை பலமாக மோதியும், அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்து, வயிற்றில் குத்தியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சக கைதிகள் கூச்சலிட்டதை கேட்ட சிறை காவலர்கள், உடனடியாக கணேஷை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Aug-2025