உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மீது அரசு பஸ் மோதி பெண் பலி; தோழி காயம்

கார் மீது அரசு பஸ் மோதி பெண் பலி; தோழி காயம்

பூந்தமல்லி, மே 13--கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பியூலா, 55. இவர், அதே பகுதியில் சர்ச் வைத்துள்ளார். மாருதி சுசூகி ஆல்டோ காரில் இவரது தோழி குளோரி, 52, என்பவருடன், ஆவடியில் உள்ள சர்சுக்கு நேற்று புறப்பட்டார்.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை கடந்தபோது, சாலையில் திரும்ப கார் திடீரென நின்றுள்ளது.அப்போது, சென்னையில் இருந்து வேலுார் நோக்கி சென்ற தடம் எண் 707 அரசு பேருந்து, காரின் பின்னால் மோதியது. இதில் காரின் பின்புறம் உருக்குலைந்தது.இந்த விபத்தில், பியூலா சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த குளோரி, தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் தமிழழகன், 35, என்பவரை கைது செய்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை