உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரியல் எஸ்டேட் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறிப்பு

ரியல் எஸ்டேட் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறிப்பு

அரும்பாக்கம்;பெண் தோழியுடன் விடுதியில் தங்கியிருந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்தவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் முரளி, 47; பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்; ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு, சில நாட்களுக்கு முன், சமூக வலைதளமான முகநுால் பக்கத்தில் பூஜா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி பேசி, நேரில் பார்த்து பழகியுள்ளனர். கடந்த 30ம் தேதி, அரும்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் இருவரும் மது அருந்தி, ஒரே அறையில் தங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு, அறையின் கதவைத் தட்டி உள்ளே புகுந்த பூஜாவின் கணவர், அவரது நண்பர் ஆகியோர், முரளியை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின், முரளியை மட்டும் அவரது காரிலேயே கடத்தி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் கட்டி வைத்துள்ளனர். அவரிடம், ௩ லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக கூறியுள்ளனர். பணம் தர மறுக்கவே, முரளி அணிந்திருந்த ஒன்பது சவரன் நகைகள், அவரது மொபைல் போன் செயலியில் இருந்து 20,000 ரூபாயை பறித்து தப்பினர். இதையடுத்து முரளி, கடந்த 31ம் தேதி மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். கடத்தப்பட்ட இடம் அரும்பாக்கம் என்பதால், அப்பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை