உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல வாலிபால் போட்டி ஆர்.எம்.டி., த்ரில் வெற்றி

மண்டல வாலிபால் போட்டி ஆர்.எம்.டி., த்ரில் வெற்றி

சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது மண்டலத்திற்கான வாலிபால் போட்டி, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டியை, ஆர்.எம்.கே., கல்லுாரி முதல்வர் முகமது ஜூனைடு, விளையாட்டு குழு தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். முதல் போட்டியில், கோஜன் பொறியியல் கல்லுாரி அணி, 25 - 15, 25 - 23 என்ற கணக்கில் ஜெ.என்.இ., கல்லுாரியையும், ஆர்.எம்.கே., கல்லுாரி, 25 - 20, 25 - 11 என்ற கணக்கில் ஜெயா பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தன.மற்றொரு போட்டியில் ஆர்.எம்.டி., அணி மற்றும் எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின. இதில் 25 - 18, 20 - 25, 27 - 25 என்ற கணக்கில் எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

கோப்பை அறிமுகம்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, ராஜபாளையத்தில், வரும் 29ம் முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது.கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டிக்கான கோப்பை அறிமுக விழா, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்தது. மாநில தடகள சங்க தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான தேவாரம், மாநில வாலிபால் சங்க வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை உள்ளிட்டோர், கோப்பையை அறிமுகப் படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி