உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரிதான தோல் புற்றுநோய் கட்டி சிம்ஸில் வாலிபருக்கு மறுவாழ்வு

அரிதான தோல் புற்றுநோய் கட்டி சிம்ஸில் வாலிபருக்கு மறுவாழ்வு

சென்னை, அரிதான தோல் புற்றுநோயால், மண்டையோடு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மறுசீரமைப்பு சிகிச்சை அளித்து, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது. மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் வாலிபர், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வகை புற்றுநோய் தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாக பரவக்கூடியது. இந்நோயாளிக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய், அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாக பாதித்து, மோசமான நிலையை எட்டியிருந்தது. இதுபோன்ற பாதிப்பு, 10 லட்சம் பேரில் ஒன்று முதல் ஐந்து பேரை மட்டுமே பாதிக்கும் நோய். ஆரம்பத்தில் தோல் கட்டி அல்லது தடிப்பாக தோன்றும். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், தசை மற்றும் எலும்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நோயாளிக்கு புற்று நோய் கட்டி அகற்றப்பட்டதுடன், உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கட்டி அரித்திருந்ததால், மண்டையோடு மறு சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டது. மூளை பாதிப்படையாமல், மறுசீரமைப்பு சிகிச்சை செய்வது, மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. புற்றுநோய் கட்டி மண்டையோட்டை பாதித்து, மூளையின் மிக அருகில் இருந்தது. இந்த சிக்கலான சிகிச்சையில் புற்றுநோய்கட்டி மீண்டும் வராமல் தடுப்பதற்கான சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள் ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை