உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தி.நகர்: தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். சென்னை மாநகரின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. இங்கு துணிக்கடைகள், நகைக் கடைகள், பாத்திரக்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகளுடன் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இதில், ரங்கநாதன் தெரு, ரயில்வே பார்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள், தங்கள் கடையின் முன் பகுதியை, சிறு கடைகளுக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து பழச்சாறு, கரும்புச் சாறு மற்றும் மலிவு விலை துணி விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளன. இதனால், ரங்கநாதன் தெருவில் நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்த புகாரை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில், தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ரயில்வே பார்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை