உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு அகற்றியும் பயனில்லை மின் கம்பத்தால் தொடரும் நெரிசல்

ஆக்கிரமிப்பு அகற்றியும் பயனில்லை மின் கம்பத்தால் தொடரும் நெரிசல்

குன்றத்துார்,குன்றத்துார் மலை குன்றில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.இந்நிலையில், குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் பிரதான சாலையை ஆக்கிரமித்து, 50க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன.இதனால், சாலை குறுகலாகி கடும் நெரிசல் ஏற்பட்டது. வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களின் கடும் எதிர்பை மீறி, கடந்த செப்டம்பரில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.ஆனால், சாலையின் குறுக்கே உள்ள பழைய மின் கம்பங்களை, ஐந்து மாதமாக இடம் மாற்றாமல் மின் வாரியத்தினர் காலம் தாழ்த்துகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குன்றத்துார் முருகன் கோவிலில் தை பூசம், வைகாசி விசாகம் என, அடுத்தடுத்து பல விழாக்கள் நடைபெற உள்ளன. முகூர்த்த நாட்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவிலில் நடைபெறுகின்றன.ஆக்கிரமிப்பு அகற்றியும் சாலை விரிவாக்கம் செய்ய முடியாததால், முருகன் கோவில் சாலையில் தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது.அதேநேரம், ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களுக்கு முன், இரும்பு தகடுகள் அமைத்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே, சாலையின் குறுக்கே இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்து, ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் புதிய சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kanagasundaram
பிப் 13, 2025 16:42

இதே நிலைதான் எங்க ஊரிலும்.திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லு ர் கிராமத்தில் உயர்நீதி மன்ற உத்தரவுபடி கோவில் புரம்போகில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அறை குறையாக இடிக்கப்பட்டது. இடிபாடுகள் இன்னமும் அகற்றப்படவில்லை.கோவிலுக்கும் எங்க வீட்டிற்கு ம் செல்லமுடியவில்லை.வருவாய்த் துறையில் கேட்டால் எங்க வேலை முடிந்தது என்கின்றனர். ஆட்சியிரடம் மனு கொடுத்தும் ஒன்னும் வேலை ஆகல.இது தான் உயர் நீதி மன்ற உத்தரவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை