| ADDED : ஜன 27, 2024 12:56 AM
வேளச்சேரி, அடையாறு மண்டலம், வேளச்சேரி விரைவு சாலையில் இருந்து, ராஜலட்சுமிநகர் செல்லும் பகுதியில், குறுக்கே மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.இதில் அடைப்பு ஏற்பட்டதால், 'மிக்ஜாம்' புயல் மழையின்போது சாலையில் வெள்ளம் தேங்கியது.வடிகால் மேல் பகுதியை உடைத்து, வெள்ளம் வடிய செய்தனர். அப்போது, அருகில் நின்ற பெயர் பலகையையும் தகர்த்தனர். பின், அதை முறையாக வைக்கவில்லை.மாறாக, வடிகாலுக்குள் நட்டு வைத்தனர். இதனால், வடிகாலுக்குள் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், பள்ளம் இருப்பது தெரியாமல் பாதசாரிகள் வடிகாலுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, வடிகாலில் நட்ட பலகையை அகற்றி, பள்ளத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் மேல் சிலாப் போடப்பட்டது.