உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.டி.சி.யில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மாற்றுப்பணி வழங்க கோரிக்கை

எம்.டி.சி.யில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மாற்றுப்பணி வழங்க கோரிக்கை

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, நிரந்தர மாற்றுப்பணி வழங்க கோரி, நிர்வாக இயக்குனர் பிரபுசங்கரிடம் ஊழியர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பணி வழங்க மறுக்க கூடாது, நிரந்தர பணி வழங்க வேண்டும். ஊனத்தன்மைக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும். மேலும், மாற்றத்திறனாளி ஊழியரின் இருப்பிடம் அருகில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்கும் அவரை மீண்டும் மீண்டும் மருத்துவ குழுமத்துக்கு அனுப்பக் கூடாது. மாதம் ஒரு முறை குறைத்தீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா, மாநகர போக்குவரத்து கழக மாற்றுத்திறனாளி ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொதுசெயலர் முகமது காசிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ